பிரபுசாலமன் இயக்கத்தில் நடிக்கும் ‘குக் வித் கோமாளி’ பிரபலம்?

கும்கி, கயல், மைனா போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான பிரபுசாலமன் அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பிரபுசாலமன்
பிரபுசாலமன்
Published on

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அஷ்வின். இவர் தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில், ‘என்ன சொல்ல போகிறாய்’ படம் மூலம் நடிகர் அஷ்வின் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார். 

புதுமுக இயக்குனர் ஹரிஹரன் இப்படத்தை இயக்குகிறார். விவேக் - மெர்வின் இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

அஷ்வின் 

இந்நிலையில், நடிகர் அஷ்வின் அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவர், இயக்குனர் பிரபுசாலமன் உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் கும்கி, கயல், மைனா போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com