ருத்ரன் படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய பூர்ணிமா பாக்யராஜ்

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் தாய் கதாபாத்திரத்தில் நடித்து வரும் பூர்ணிமா பாக்யராஜ் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.
பூர்ணிமா பாக்யராஜ்
பூர்ணிமா பாக்யராஜ்
Published on

1980களில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் பூர்ணிமா பாக்யராஜ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிகர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் பாக்கியராஜ் அவர்களை திருமணம் செய்து கொண்டார். இத் தம்பதிகளுக்கு சரண்யா, சாந்தனு என்ற இரு பிள்ளைகள் உள்ளனர்.

பூர்ணிமா பாக்யராஜ் தற்போது பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு திரைப்படம்தான் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகும் ருத்ரன். இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகை பூர்ணிமா பாக்யராஜின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள்.

ருத்ரன் படக்குழுவினர்

பூர்ணிமா பாக்யராஜ் இன்று தனது 61வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com