ரியோவின் ‘பிளான் பண்ணி பண்ணனும்’... அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘பிளான் பண்ணி பண்ணனும்’ படத்தில் ரியோவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.
பிளான் பண்ணி பண்ணனும் படக்குழு
பிளான் பண்ணி பண்ணனும் படக்குழு
Published on

பாசிடிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் குமார் மற்றும் எல்.சிந்தன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘பிளான் பண்ணி பண்ணனும்’. இப்படத்தை ‘பானா காத்தாடி’ புகழ் பத்ரி வெங்கடேஷ் இயக்கி உள்ளார். இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் ரியோ நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். மேலும் பால சரவணன், ரோபோ ஷங்கர், தங்கதுரை ஆகியோர் காமெடி வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, வருகிற ஏப்ரல் 30-ந் தேதி ‘பிளான் பண்ணி பண்ணனும்’ திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com