ஒவ்வொரு நடிகருக்கும் அது கனவு - பவித்ரா லக்‌ஷ்மி

சின்னத்திரையில் மிகவும் பிரபல நடிகையாக இருக்கும் பவித்ரா லக்‌ஷ்மி, ரியோவுடன் இணைந்து ஒரு ஆல்பம் பாடலில் நடனம் ஆடியிருக்கிறார்.
பவித்ரா
பவித்ரா
Published on

இளம் திறமையாளர்களை, அவர்களின் திறமைகளை பொது வெளியில் பிரபலபடுத்தும் வகையில், சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் புதிய இளம் திறமையாளர்களின் உருவாக்கத்தில் ஆல்பம் பாடல்களை உருவாக்கி வருகிறது. அஸ்கமாரோ, குட்டிப்பட்டாஸ் பாடல்களின் பிரமாண்ட வெற்றியினை தொடர்ந்து, தற்போது இவர்கள் தயாரிப்பில் ஐந்தாவது ஆல்பம் பாடலாக, ரியோ ராஜ் மற்றும் பவித்ரா லக்‌ஷ்மி நடிப்பில் “கண்ணம்மா என்னம்மா” என்ற ஆல்பம் பாடல் உருவாகியுள்ளது. 

தேவ் பிரகாஷ் இசையில் இப்பாடலை பிரிட்டோ ஜே.பி இயக்கியுள்ளார். இப்பாடலின் வெளியீட்டு விழா, சின்னத்திரை பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், சூப்பர் சிங்கர் பாடகர்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் கலை நிகழ்வுகள், நடனம் என கோலகலமாக நடைபெற்றது. பாடலை நடன இயக்குநர் சாண்டி வெளியிட பிரபலங்கள் பெற்றுக்கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட செஃப் தாமு, நடிகை சுனிதா “கண்ணம்மா என்னம்மா” பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.

பவித்ரா - ரியோ

இதில் பவித்ரா லக்‌ஷ்மி பேசும்போது, ‘ஒரு ஆடியோ லாஞ்ச் என்பது ஒவ்வொரு நடிகருக்கும் கனவு. அது பெரிய படம் பெரிய நடிகர் இருந்தால் தான் நடக்கும் என்றில்லாமல், திறமையிருந்தால் அனைவருக்கும் அந்த மேடை கிடைக்கும் என்பதை நிரூபித்த நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ்க்கு நன்றி. இந்த பாடலை ஷாம் விஷால் பாடியிருக்கிறார் என்றவுடனே, நான் ஓகே சொல்லிவிட்டேன். சூப்பர் சிங்கரிலிருந்தே அவருக்கு நான் ரசிகை. பிரிட்டோ இதனை அற்புதமாக இயக்கியிருக்கிறார். எனக்காக இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com