ரொமாண்டிக் படத்தில் பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் ‘குக் வித் கோமாளி’ பவித்ரா

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை பவித்ராவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம்.
பவித்ரா
பவித்ரா
Published on

விளம்பரங்களிலும், குறும்படங்களிலும் நடித்து வந்த நடிகை பவித்ரா லட்சுமி, குக் வித் கோமாளி எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர்.

நடிகை பவித்ரா தற்போது படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அவர் நடிக்கும் முதல் தமிழ் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நகைச்சுவை நடிகர் சதீஷுக்கு ஜோடியாக பவித்ரா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகை பவித்ரா மேலும் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தில் அவர், நடிகர் கதிருக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம். இப்படத்தை புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ரொமாண்டிக் படமாக இது உருவாக உள்ளதாம். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com