லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் இணைந்த ‘வலிமை’ பட பிரபலம்

லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்கிறார், இப்படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்கி வருகிறார்.
மோகன் ராஜா, சிரஞ்சீவி
மோகன் ராஜா, சிரஞ்சீவி
Published on

மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘லூசிபர்’. இப்படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்கின்றனர். இதில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். 

தமிழில், ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், தனி ஒருவன் போன்ற படங்களை இயக்கிய மோகன் ராஜா, லூசிபர் தெலுங்கு ரீமேக்கை இயக்குகிறார். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் தொடங்கியது. முதலில் ஆக்‌ஷன் காட்சியை படமாக்குகின்றனர்.

மோகன் ராஜா, சுரேஷ், சில்வா, நீரவ்ஷா

இந்நிலையில், பிரபல ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா இப்படத்தில் இணைந்துள்ளதை படக்குழு உறுதிப்படுத்தி உள்ளது. படப்பிடிப்பு தளத்தில் கலை இயக்குனர் சுரேஷ், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா ஆகியோருடன் எடுத்த செல்பி புகைப்படத்தை இயக்குனர் மோகன் ராஜா பகிர்ந்துள்ளார். தமிழில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படத்துக்கும் நீரவ்ஷா தான் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com