செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ - அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.
செல்வராகவன், நெஞ்சம் மறப்பதில்லை பட போஸ்டர்
செல்வராகவன், நெஞ்சம் மறப்பதில்லை பட போஸ்டர்
Published on

செல்வராகவன் இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு உருவான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாகவும், ரெஜினா மற்றும் நந்திதா கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ரெஜினா பேயாக நடித்திருக்கிறார். 

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு அரவிந்த கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் எடுக்கப்பட்டு 5 வருடங்கள் ஆனாலும், சில காரணங்களால் இன்று வரை ரிலீசாகாமல் உள்ளது. 

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி இப்படம் வருகிற மார்ச் மாதம் 5-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com