நடிகை மேக்னாராஜ் குழந்தைக்கு கொரோனா

சமீபத்தில் மரணமடைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவி மேக்னாராஜ் மற்றும் அவரது குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேக்னா ராஜ்
மேக்னா ராஜ்
Published on

இந்நிலையில் நடிகை மேக்னாராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெற்றோரும், நானும் எனது குழந்தையும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறோம். எங்களுடன் கடந்த வாரத்தில் தொடர்பில் இருந்தவர்களுக்கு இதை தெரிவிக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் மேக்னாராஜ் தனது பதிவில் கூறியிருப்பதாவது,'எனது ரசிகர்களும், சிருவின் ரசிகர்களும் கவலைப்பட வேண்டாம். இந்த வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வருவோம்' என்று குறிப்பிட்டுள்ளார். இதையறிந்த ரசிகர்கள் மேக்னாராஜின் குடும்பத்தினர் விரைவில் குணமடைய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com