அஜித் பட இயக்குனருடன் இணையும் ‘மாஸ்டர்’ தயாரிப்பாளர்?

மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ, அடுத்ததாக தயாரிக்க உள்ள படத்தை, அஜித் பட இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சேவியர் பிரிட்டோ
சேவியர் பிரிட்டோ
Published on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் மாஸ்டர். பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. சுமார் 200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனையும் படைத்தது. மாஸ்டர் படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்திருந்தார். மாஸ்டர் படம் கொடுத்த உத்வேகத்தால் அடுத்தடுத்து படங்களை அவர் தயாரிக்க உள்ளாராம்.

அவர் அடுத்ததாக தயாரிக்கும் படத்தில் அவரின் மருமகனும், நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் நடிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இந்நிலையில், அப்படத்தை இயக்க உள்ள இயக்குனர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அஜித்தை வைத்து பில்லா மற்றும் ஆரம்பம் என இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த விஷ்ணுவர்தன் தான் அப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com