பிக்பாஸ் வீட்டுக்கு செல்கிறீர்களா?... மாஸ்டர் மகேந்திரன் பதில்

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வரும் மாஸ்டர் மகேந்திரன், கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி கூறியிருக்கிறார்.
மகேந்திரன்
மகேந்திரன்
Published on

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. நேற்று நடிகர் கமல் பிக்பாஸ் 5 நிகழ்ச்சிக்கான முதல் புரமோவை வெளியிட்டார். இது ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலானது.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் யார் யாரெல்லாம் கலந்துக் கொள்வார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இந்நிலையில், மாஸ்டர் மகேந்திரன் சமூக வலைத்தள பக்கத்தில் நேரலையில் ரசிகர்களிடம் பேசும்போது, ரசிகர் ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைகிறீர்களா என கேட்க, அதற்கு மகேந்திரன், வாழ்க்கையே ஒரு பிக்பாஸ் தான் என பதிலளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com