புது கார் வாங்கிய குட்டி ‘பவானி’.... நேரில் அழைத்து வாழ்த்திய விஜய் சேதுபதி

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் மாஸ்டர் மகேந்திரன் புது கார் வாங்கி இருக்கிறார்.
விஜய் சேதுபதி, மகேந்திரன்
விஜய் சேதுபதி, மகேந்திரன்
Published on

‘நாட்டாமை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பலருடைய கவனத்தையும் ஈர்த்தவர் மாஸ்டர் மகேந்திரன். இப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானார். இவர் பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். 

பொங்கலுக்கு விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'மாஸ்டர்' படத்தில், மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இளம் வயது விஜய் சேதுபதியாக ‘பவானி’ எனும் கதாபாத்திரத்தில் நடித்து எல்லோராலும் பாராட்டப்பட்டார் மகேந்திரன்.

சமீபத்தில் அவர் புதிய கார் ஒன்றை வாங்கி இருந்தார். தற்போது அந்த காருடன் நடிகர் விஜய் சேதுபதியை, அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார் மகேந்திரன். அந்த காரை ஓட்டிப் பார்த்த விஜய் சேதுபதி, அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதியுடன் எடுத்த புகைப்படங்களை மகேந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘என்னோட பவானி... விஜய் சேதுபதி அண்ணா’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com