புதிய வாழ்க்கை... புதிய பயணம்... மாஸ்டர் மகேந்திரன் நெகிழ்ச்சி

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் மாஸ்டர் மகேந்திரன் நெகிழ்ச்சியுடன் ஒரு பதிவு செய்திருக்கிறார்.
மகேந்திரன் - லோகேஷ் கனகராஜ்
மகேந்திரன் - லோகேஷ் கனகராஜ்
Published on

‘நாட்டாமை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பலருடைய கவனத்தையும் ஈர்த்தவர் மாஸ்டர் மகேந்திரன். இப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானார். இவர் பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். 

சமீபத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'மாஸ்டர்' படத்தில், மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இளம் வயது விஜய் சேதுபதியாக நடித்து எல்லோராலும் பாராட்டப்பட்டார் மகேந்திரன்.

இந்நிலையில், மாஸ்டர் மகேந்திரன் புதிய கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். இந்த காரின் சாவியை மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கையால் வாங்கி இருக்கிறார். மேலும் புதிய ஆண்டு, புதிய வாழ்க்கை, புதிய பயணம் எல்லாம் மாஸ்டரில் இருந்து தொடங்கியது என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் மாஸ்டர் மகேந்திரனுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com