மாயோன் படத்தின் டப்பிங்கை முடித்த சிபிராஜ்

கபடதாரி படத்திற்குப் பிறகு சிபிராஜ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் மாயோன் படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
சிபிராஜ்
சிபிராஜ்
Published on

சிபிராஜ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘மாயோன்’. இதில் சிபிராஜ்க்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும், கே.எஸ்.ரவிகுமார், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டபுள் மீனீங் புரடொக்‌ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்து திரைக்கதை எழுதி இருக்கும் இப்படத்தை கிஷோர் இயக்கி இருக்கிறார். 

மர்மங்கள் நிறைந்த, சாகசப் பயணத்தை வெளிப்படுத்தும், இப்படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. தற்போது இப்படத்தின் பின்னணி பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. சமீபத்தில் நடிகர் சிபிராஜ் தனது காட்சிக்கான டப்பிங்கை முடித்துக் கொடுத்துள்ளார்.

படக்குழுவினருடன் சிபிராஜ்

இளையராஜா இசையமைக்கும் இப்படத்தின் ஆடியோ, டிரைலர் மற்றும் உலகளாவிய திரை வெளியீட்டு தேதியை, விரைவில் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com