பிரபல நடிகரை படப்பிடிப்பு தளத்திற்கு வரவேற்ற லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்தில் பிரபல நடிகர் இணைந்து இருக்கிறார்.
கமல் - லோகேஷ் கனகராஜ்
கமல் - லோகேஷ் கனகராஜ்
Published on

மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ‘விக்ரம்’. நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. 

இப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

விக்ரம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் தற்போது தொடங்கி இருக்கிறது. இந்த படப்பிடிப்பில் நடிகர் கமலுடன் இணைந்து நரேன் நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். கமலுடன் இணைந்து நடிப்பதை மகிழ்ச்சியுடன் நரேன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நரேனின் பதிவுக்கு, படப்பிடிப்பு தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன் சார். மீண்டும் உங்களுடன் பணியாற்றுவது சந்தோஷம்’ என்று பதிவு செய்து இருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com