லாபம் படக்குழுவினரின் திடீர் அறிக்கை

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் லாபம் படக்குழுவினர் திடீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
விஜய் சேதுபதி - ஸ்ருதிஹாசன்
விஜய் சேதுபதி - ஸ்ருதிஹாசன்
Published on

விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘லாபம்’. எஸ்.பி.ஜனநாதன் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

இந்நிலையில், படக்குழுவினர் திடீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் படங்களில் தொனிக்கும் கருத்துகளுக்கும், ஒலிக்கும் போராட்டக் குரலுக்கும் என்றைக்கும் முடிவு கிடையாது. அவருடைய படங்களில் வெளிப்படுத்தியுள்ள கருத்துகள் யாவும் காலத்துக்கும் பொருந்திப் போகக்கூடியவை. அப்படிப்பட்ட படைப்புகளில் ஒன்றுதான் எங்கள் நிறுவனமும் விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸூம் இணைந்து தயாரித்து விஜய் சேதுபதி நடிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லாபம்’ திரைப்படம்.

இந்தப் படம் திரைக்கு வருவதற்கான இறுதிக்கப்பட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்தத் தருணத்தில் எங்கள் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் மறைவு மிகுந்த வருத்தமும், வேதனையும் அளிக்கிறது.

அதேசமயம், எங்கள் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் ‘லாபம்’ படத்தின் அனைத்துப் பணிகளையும் முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டார். எஞ்சியிருக்கும் சில பணிகளை எங்கள் படக்குழுவினரே முடித்து வெளியுடவுள்ளோம். அனைத்து பணிகளையும் முடித்து ஏற்கெனவே திட்டமிட்டபடி வருகிற ஏப்ரல் மாதம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்கள் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கு மணிமகுடமாகவும், அவரின் ரசிகர்களுக்கான திரைப்படமாக ‘லாபம்’ இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com