‘காசேதான் கடவுளடா’ ரீமேக்.... முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘காசேதான் கடவுளடா’ படத்தின் ரீமேக்கில் சிவா நாயகனாக நடித்துள்ளார்.
காசேதான் கடவுளடா படக்குழு
காசேதான் கடவுளடா படக்குழு
Published on

சித்ராலயா கோபு இயக்கத்தில் முத்துராமன், தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோரமா நடிப்பில் கடந்த 1972-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘காசேதான் கடவுளடா’. தற்போது இப்படத்தை ரீமேக் செய்துள்ளனர். ஆர்.கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் சிவா ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா ஆனந்த் நடிக்க, யோகிபாபு, ‘குக் வித் கோமாளி’ புகழ், சிவாங்கி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

காசேதான் கடவுளடா படக்குழு

கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. 35 நாட்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் ஒத்துழைப்பால் படப்பிடிப்பை வேகமாக நடத்தி முடித்ததாக இயக்குனர் ஆர்.கண்ணன் தெரிவித்துள்ளார். விரைவில் பின்னணி பணிகளை முடித்து படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com