

திரையுலகில் தற்போது ஆந்தாலஜி என்று அழைக்கப்படும் ஒரு சில குறும்படங்களின் குவியல் பிரபலமாகி வருகிறது. தமிழில் ஏற்கனவே சில்லுக்கருப்பட்டி, புத்தம் புது காலை, பாவக்கதைகள், குட்டி ஸ்டோரி, நவரசா ஆகிய ஆந்தாலஜி படங்கள் வெளியாகிய நிலையில், தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் ‘கசட தபற’ என்கிற ஆந்தாலஜி படம் உருவாகி உள்ளது.
இப்படத்தை இயக்குனர் வெங்கட்பிரபுவும், டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரனும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர், ரெஜினா, சாந்தனு, பிரேம்ஜி, விஜயலட்சுமி, வெங்கட் பிரபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கசட தபற படக்குழு
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற ஆகஸ்ட் 27-ந் தேதி இப்படம் நேரடியாக சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் இடம்பெறும் 5 கதைகளும் தென் சென்னையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு உள்ளது.