25 ஆண்டுகளுக்கு பின் இணையும் கமல் - மீனா?

நடிகர் கமல்ஹாசனும், நடிகை மீனாவும் ஏற்கனவே ‘அவ்வை சண்முகி’ படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கமல், மீனா
கமல், மீனா
Published on

மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் 2013-ல் வெளியாகி வசூல் குவித்த திரிஷ்யம் படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் கமல்ஹாசன், கவுதமி நடித்து இருந்தனர். தெலுங்கு, இந்தி, கன்னடம், சீன மொழிகளிலும் திரிஷ்யம் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில், திரிஷ்யம் படத்தின் 2-ம் பாகமும் மோகன்லால், மீனா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தையும் தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் சீன மொழிகளில் ரீமேக் செய்வதாக அறிவித்து உள்ளனர்.

கவுதமி, மீனா

தமிழிலும் ‘திரிஷ்யம் 2’ படம் பாபநாசம் 2-ம் பாகமாக உருவாக உள்ளதாகவும், இதில் நடிக்க கமல் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் பேசப்படுகிறது. மேலும் முதல் பாகத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த கவுதமி, இரண்டாம் பாகத்தில் நடிக்க மாட்டார் என்றும், அவருக்கு பதிலாக நடிகை மீனாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 

நடிகர் கமல்ஹாசனும், நடிகை மீனாவும் ஏற்கனவே கடந்த 1996-ம் ஆண்டு வெளியான ‘அவ்வை சண்முகி’ படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com