அசுரன் படத்திற்கான தேசிய விருதை பெற்றார் கலைப்புலி தாணு

டெல்லியில் நடைபெற்று வரும் 67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு விருது பெற்றிருக்கிறார்.
விருது பெறும் கலைப்புலி தாணு
விருது பெறும் கலைப்புலி தாணு
Published on

67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் சிறந்த படத்திற்கான விருது அசுரன் படத்திற்கு வழங்கப்பட்டது. அசுரன் படத்தை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு, மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் தேசிய விருதை பெற்றனர். தேசிய விருதை துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, கலைப்புலி தாணு மற்றும் இயக்குனர் வெற்றிமாறனுக்கு வழங்கினார்.

விருது பெறும் வெற்றிமாறன்

அசுரன் படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க, வெற்றிமாறன் இயக்கி இருந்தார். தனுஷ், மஞ்சுவாரியர், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com