காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் புதிய அப்டேட்

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகி வரும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார்.
காத்துவாக்குல ரெண்டு காதல் படக்குழுவினர்
காத்துவாக்குல ரெண்டு காதல் படக்குழுவினர்
Published on: 

தமிழ் சினிமாவில் பிசியான நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி. இவர் தற்போது கோலிவுட் படங்கள் மட்டுமில்லாமல் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாரா & சமந்தா உடன் ஜோடியாக நடித்து வருகிறார் விஜய்சேதுபதி.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் தொடங்கினாலும் கொரோனா ஊரடங்கால் நடிகர்களின் கால்ஷீட் தேதிகள் மாறியது. எனவே படப்பிடிப்பை தொடங்கவில்லை. தற்போது ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை புதுச்சேரியில் தொடங்கியுள்ளது படக்குழு.

அங்கு 10 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனையடுத்து பின்னணி பணிகள் தொடங்கவுள்ளதாகவும் இவ்வருட இறுதிக்குள் படம் ரிலீஸாகும் எனவும் கூறப்படுகிறது.

X