‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட விக்னேஷ் சிவன்

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகி வரும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.
விக்னேஷ் சிவன், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் போஸ்டர்
விக்னேஷ் சிவன், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் போஸ்டர்
Published on

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் பதிவு

இப்படத்தின் முதல் பாடல் கடந்த பிப்ரவரி மாதம் காதலர் தினத்தன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில், அடுத்த பாடல் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்த அப்டேட்டை இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். அதன்படி வருகிற ஜூலை மாதம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய போது அவர் இதனை தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com