தமிழில் மாஸ் காட்ட களமிறங்கும் ஜான் கொக்கன்

வீரம், ஒஸ்தி படங்களிலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் படங்களில் நடித்த ஜான் கொக்கன் தமிழில் மாஸ்காட்ட களமிறங்கி இருக்கிறார்.
ஜான் கொக்கன்
ஜான் கொக்கன்
Published on

அனைத்து சினிமா ரசிகர்களாலும், சினிமாக்காரர்களாலும் நன்கு அறியப்பட்டவர் ஜான் கொக்கன். மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் 2005 ஆம் ஆண்டு முதல் மாடலிங் துறையில் நுழைந்தார். 10 சிறந்த மாடல்களில் ஒருவராக முன்னேறினார். அதன்பின் மோகன்லால் நடிப்பில் வெளியான கலாபம் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து, மலையாளத்தில் லவ் இன் சிங்கப்பூர், அலெக்சாண்டர் தி கிரேட் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

தமிழில், அஜித்தின் வீரம், விஷாலின் மதகதராஜா, சிம்பு நடித்த ஒஸ்தி படங்களில் நடித்துள்ளார். மேலும், தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

தமிழ், மலையாளம் மொழி மட்டுமில்லாமல், கன்னடம் மற்றும் தெலுங்கில் 20க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார். கன்னடத்தில் பிரம்மாண்டமாக வெளியான கே.ஜி.எஃப் முதல் பாகத்தில் வில்லனாகவும், பாகுபலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் இவர் நடித்திருந்தார். தற்போது அதிகம் எதிர்பார்க்கும் கே.ஜி.எஃப் 2 ஆம் பாகத்திலும் இவர் நடித்திருக்கிறார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்கள் நடித்த பல படங்களில் இவர் பணியாற்றி இருக்கிறார்.

தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி இருக்கிறார். 

X

Maalai Malar
www.maalaimalar.com