பூஜையுடன் திரில்லர் படத்தை தொடங்கிய ‘திரிஷ்யம்’ கூட்டணி

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் மோகன்லால், இயக்குனர் ஜீத்து ஜோசப் உடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார்.
ஜீத்து ஜோசப், மோகன்லால்
ஜீத்து ஜோசப், மோகன்லால்
Published on

மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான திரிஷ்யம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து இவர்கள் கூட்டணியில் அண்மையில் வெளியான திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது மோகன்லாலும் ஜீத்து ஜோசப்பும் மூன்றாவது முறையாக இணைந்து பணியாற்ற உள்ளனர். இப்படத்திற்கு ‘டுவெல்த் மேன்’ என பெயரிட்டுள்ளனர். இது முழுக்க முழுக்க திரில்லர் கதையம்சம் கொண்ட படமாம். திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களையும் தயாரித்த ஆண்டனி பெரம்பாவூர், இப்படத்தையும் தயாரிக்கிறார். 

டுவெல்த் மேன் பட பூஜையின்போது எடுத்த புகைப்படம்

இந்நிலையில், ‘டுவெல்த் மேன்’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் இயக்குனர் ஜீத்து ஜோசப், தயாரிப்பாளர் ஆண்டனி உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com