நடிகைகளுக்கு சிபாரிசு செய்வதுண்டா? - ஜெயம் ரவி பளீச் பதில்

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி, நடிகைகளுக்கு சிபாரிசு செய்வதுண்டா என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஜெயம் ரவி
ஜெயம் ரவி
Published on

ஜெயம் ரவி நடித்து பொங்கல் விருந்தாக ‘பூமி’ படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்து இருக்கிறார். ‘ரோமியோ ஜுலியட்,’ ‘போகன்’ ஆகிய படங்களை இயக்கிய லட்சுமன் இப்படத்தை இயக்கி உள்ளார்.

பூமி படத்தை பற்றி ஜெயம் ரவி சமீபத்திய பேட்டியில் கூறியதாவது: ‘பூமி,’ விவசாயிகள் பிரச்சினையை பற்றி பேசும் படம். சில பாரம்பரியமான நல்ல விஷயங்களை நாம் எங்கோ தூக்கிப்போட்டு விட்டோம். அவைகளை மறந்து விட்டோம். உதாரணத்துக்கு கொரோனாவின் தாக்குதல்களுக்கு பின்னர்தான் அதை தடுக்கும் மருந்து ஆயுர்வேதத்தில் இருப்பது தெரியவந்தது. 

அதுபோல்தான் இயற்கை விவசாயமும் உள்ளது. பூமி படத்தின் மிக சிறந்த அம்சம், திரைக்கதை. அனைத்து தரப்பினரும் ரசிக்கிற மாதிரி கதை சொல்லப்பட்டுள்ளது. ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கும். மிக நேர்மையாக கதை சொல்லியிருக்கிறார், இயக்குனர் லட்சுமன்.

உங்களுக்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகிகள் பற்றி ‘‘இவர் பொருத்தமாக இருப்பார்” என்று யாருக்காவது சிபாரிசு செய்வது உண்டா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயம் ரவி, அந்த சைடில் நான் போவது இல்லை. கதையை தேர்வு செய்வதில் நான் கவனம் செலுத்துகிறேன். அது அப்பாவிடம் இருந்து கற்றுக்கொண்டது”. இவ்வாறு ஜெயம் ரவி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com