பிக்பாஸில் திடீர் என்ட்ரி கொடுத்த ஜெயம் ரவி.... ஆச்சர்யத்தில் போட்டியாளர்கள்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி, கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.
ரம்யா பாண்டியன், ஜெயம் ரவி
ரம்யா பாண்டியன், ஜெயம் ரவி
Published on

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில் தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். 80 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 

இதுவரை நடந்த மூன்று சீசன்களில் இடையிடையே படங்களின் புரமோஷனுக்காக நடிகர், நடிகைகள் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வது வழக்கம். இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக புரமோஷனுக்காக வரும் நடிகர், நடிகைளை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதற்கு பதிலாக அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமலிடம் வந்து உரையாடி விட்டு செல்கின்றனர்.

ஏற்கனவே கமலின் விக்ரம் படத்தின் டைட்டில் டீசரை வெளியிட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் சென்றிருந்தனர். இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி ‘பூமி’ படத்தின் புரமோஷனுக்காக சென்றுள்ளார். ஜெயம் ரவியை அகம் டிவி வழியே பார்த்த போட்டியாளர்கள் ஆச்சர்யத்தில் திளைத்தனர். லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள பூமி படம் வருகிற பொங்கல் பண்டிகையன்று நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com