பிரபாஸின் பிரம்மாண்ட படத்தில் இணையும் ‘அண்ணாத்த’ பட வில்லன்

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ் ராதே ஷ்யாம், ஆதிபுருஷ், சலார் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
பிரபாஸ்
பிரபாஸ்
Published on

பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான பிரபாஸ், தற்போது கே.ஜி.எப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் ‘சலார்’ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகும் இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக சுருதிஹாசன், பாலிவுட் நடிகை வாணி கபூர் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் ஜெகபதி பாபு, சலார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தில் வில்லனாக நடித்து வரும் அவர், விரைவில் சலார் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது. 

ஜெகபதி பாபு

தெலுங்கு, கன்னடம் ஆகிய இரு மொழிகளில் உருவாகும் சலார் படம், தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட பிற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் 14-ந் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com