குழந்தைகளுக்காக கொரோனா வார்டு அமைக்கும் ‘வலிமை’ ஹீரோயின்

இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் ஹியூமா குரேஷி, தற்போது வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
ஹியூமா குரேஷி
ஹியூமா குரேஷி
Published on

ரஜினிகாந்துடன் காலா படத்தில் நடித்து பிரபலமானவர் ஹியூமா குரேஷி. இவர் தற்போது வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்தியிலும் முன்னணி நடிகையாக இருக்கும் ஹியூமா குரேஷி, தொண்டு நிறுவனம் தொடங்கி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதன்மூலம் உதவிகள் வழங்கி வருகிறார்.

இந்நிலையில், கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள குழந்தைகளுக்கான தனி வார்டு ஒன்றை உருவாக்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டு உள்ளார். இதுகுறித்து ஹியூமா குரேஷி கூறும்போது: “எனது தொண்டு நிறுவன அமைப்பு மூலம் இதுவரை 100-க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. கொரோனாவுக்கு எதிரான யுத்தம் இன்னும் முடியவில்லை.

கொரோனா 3-வது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. எனவே அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். இரண்டாவது அலையை போல் நிலைமை மோசமாவது வரை பார்த்துக்கொண்டிருக்க கூடாது. டெல்லியில் குழந்தைகளுக்காக 30 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டை உருவாக்கி வருகிறோம்” என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com