ஜி.வி.பிரகாஷ் படத்தின் தலைப்பு அறிவிப்பு

சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷ்
Published on

தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். இவர் நடிப்பில் பல படங்கள் உருவாகி வருகிறது. தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக காயத்ரி நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், இப்படத்திற்கு ‘இடி முழக்கம்’ என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதன் டைட்டில் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த டைட்டில் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே கவனம் பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com