கவுதம் மேனன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களுக்கு பிறகு தற்போது, மூன்றாவது முறையாக கவுதம் மேனனுடன் சிம்பு கூட்டணி அமைத்துள்ளார்.
சிம்பு, கவுதம் மேனன்
சிம்பு, கவுதம் மேனன்
Published on

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு’. சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படம் வரும் ஆயுதப்பூஜையையொட்டி வெளியாக உள்ளது. இந்த படத்தை முழுவதுமாக முடித்துள்ள சிம்பு அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த உள்ளார். 

அந்த வகையில் கவுதம் மேனன் இயக்கத்தில் அடுத்து சிம்பு நடிக்கும் படம் ‘நதிகளிலே நீராடும் சூரியன்‘. 

இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக கவுதம் மேனனுடன் சிம்பு கூட்டணி அமைத்துள்ளார்.

கீர்த்தி சனோன்

இந்நிலையில் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோனுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியில் பிசியாக உள்ள கீர்த்தி சனோன் தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார். சிம்பு படத்தில் கீர்த்தி சனோன் இணைந்தால் முதல் முறையாக தமிழில் அறிமுகமாகும் படமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com