‘என் பெயர் ஆனந்தன்’ பட புரமோஷனுக்கு வர மறுக்கும் அதுல்யா - படக்குழுவினர் அதிருப்தி

‘என் பெயர் ஆனந்தன்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில், நடிகை அதுல்யா ரவி ஆர்வம் காட்டவில்லை என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அதுல்யா
அதுல்யா
Published on

வரும் நவ-27ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படம் ‘என் பெயர் ஆனந்தன்’. ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாகவும் அதுல்யா ரவி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு நான்கு முறை சிறந்த படத்திற்கான விருதுகளை வென்றுள்ள இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில், நாயகி அதுல்யா ரவி பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்று ஒரு தகவல் வெளியானது.  

இதுகுறித்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தரப்பில் விசாரித்தபோது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன. இந்தப்படத்தில் அதுல்யா ரவி கதாநாயகியாக ஒப்பந்தமான போது, ஒரு படத்தில் மட்டுமே நடித்திருந்தார். அதற்கடுத்து வந்த காலகட்டத்தில் சுசீந்திரன், சமுத்திரக்கனி போன்ற பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்தார். அதனை தொடர்ந்து அவருக்கு தான் மிகப்பெரிய அளவில் முன்னணி நடிகையாக மாறிவிட்டோம் என்கிற உணர்வு ஏற்பட்டு விட்டது.

எங்கள் படம் ஒவ்வொரு முறை சர்வதேச விருது பெற்ற போதெல்லாம் அந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட கூட மறுத்துவிட்டார். மேலும் பர்ஸ்ட்லுக் போஸ்டர், டீசர் என படத்தின் எந்த ஒரு புரமோஷனிலும் அவர் தனது பங்களிப்பை தரவில்லை.

தமிழ் நடிகைகளுக்கு ஏன் வாய்ப்பு தர மறுக்கிறீர்கள் என பரவலாக ஒரு குற்றச்சாட்டு உண்டு.. ஆனால் தமிழ்ப்பெண் என்பதாலேயே எங்கள் படத்தில் அதுல்யா ரவியை நடிக்கவைத்து விட்டு, தற்போது புரமோஷன் நிகழ்ச்சிக்க்கு கூட அவரை கெஞ்ச வேண்டிய நிலைக்குத்தான் எங்களை தள்ளியுள்ளார்.

இன்னும் சொல்லப்போனால் தான் நடித்த பெரிய இயக்குனர்களின் படங்கள் பெயரை மட்டுமே பெருமையுடன் சொல்லிக்கொள்ள விரும்பும் அதுல்யா, வாய்ப்பு இல்லாத காலத்தில் தனக்கு கிடைத்த சிறிய படங்களுக்கு பாராமுகம் காட்டுகிறார். 

படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்டே ஆகவேண்டும் என நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் இதற்கான விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும்” என்கிறார்கள் படத்தின் தயாரிப்பாளர் தரப்பில்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com