ரேவதி தோற்றத்திற்கு மாறிய பிரபல நடிகை.... வைரலாகும் வீடியோ

பெரியத்திரையில் இருந்து தற்போது சின்னத்திரையில் பிசியாக நடித்து வரும் நடிகை ஒருவர், ரேவதி தோற்றத்திற்கு மாறி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
டெல்னா டேவிஸ் - ரேவதி
டெல்னா டேவிஸ் - ரேவதி
Published on

நித்திலன் இயக்கத்தில் பாரதிராஜா, வித்தார்த் நடிப்பில் வெளியான படம் ‘குரங்கு பொம்மை’. இதில் டெல்னா டேவிஸ் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் ஆக்கம், 49 ஓ உள்ளிட்ட படங்களிலும் கதாநாயகியாக இவர் நடித்திருக்கிறார். தற்போது இவர் பெரியத்திரையில் இருந்து சின்னத்திரையில் நடித்து வருகிறார்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் அன்பே வா என்னும் மெகாத் தொடரில் டெல்னா டேவிஸ் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த தொடர் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார் என்றே சொல்லலாம். தற்போது இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

டெல்னா டேவிஸ்

அந்த வீடியோவில் ரேவதி நடித்த ‘மௌன ராகம்’ படத்தில் இடம்பெற்ற சின்ன சின்ன வண்ணகுயில் பாடலுக்கு ரீல் செய்து வெளியிட்டு இருக்கிறார் டெல்னா டேவிஸ். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com