திருமண கோலத்தில் தர்ஷா குப்தா... வைரலாகும் புகைப்படம்

சின்னத்திரை சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை தர்ஷா குப்தாவின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தர்ஷா குப்தா
தர்ஷா குப்தா
Published on

தமிழில் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘திரெளபதி’. இப்படத்தை இயக்கிய மோகன் ஜி, அடுத்ததாக ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். ‘திரெளபதி’ பட நாயகன் ரிச்சர்ட் ரிஷி, இந்தப் படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். 

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். மேலும் இயக்குனர் கவுதம் மேனன், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

ரிச்சர்ட் ரிஷி - தர்ஷா குப்தா

இந்த நிலையில், ருத்ரதாண்டவம் படத்தில் ரிச்சர்ட் ரிசி மற்றும் தர்ஷா குப்தா இருவரும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com