தனுஷ் நடிக்கும் ‘டி43’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தனுஷ்
தனுஷ்
Published on

துருவங்கள் பதினாறு, மாஃபியா போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் அடுத்ததாக தனுஷின் 43-வது படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார், மகேந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள். 

இந்நிலையில், டி43 படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி நடிகர் தனுஷின் பிறந்தநாள், நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் காலை 11 மணிக்கு ‘டி43’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அப்படத்தின் தலைப்பும் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தனுஷ், மாளவிகா மோகனன்

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com