‘சியான் 60’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்

விக்ரமின் ‘சியான் 60’ படத்தில், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
கார்த்திக் சுப்புராஜ், சியான் 60 படத்தின் போஸ்டர்
கார்த்திக் சுப்புராஜ், சியான் 60 படத்தின் போஸ்டர்
Published on

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் ‘சியான் 60’. இப்படத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மூலம் லலித்குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

மேலும் இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ‘சியான் 60’ படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சியான் 60 படக்குழு

சமீபத்திய பேட்டியில் இப்படம் குறித்த முக்கிய அப்டேட்டை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார். இதுவரை ‘சியான் 60’ படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாகவும், கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தபின் எஞ்சியுள்ள படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com