ஐந்து வெற்றிக்கு துணை நின்ற படைப்பாளி - ஒளிப்பதிவாளர் மறைவுக்கு பாரதிராஜா இரங்கல்

எனது முதல் ஐந்து வெற்றிகரமான படங்களுக்கு துணை நின்ற நிவாஸின் மரணம் தனக்கு மிகுந்த வருத்தமளிப்பதாக இயக்குனர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாரதிராஜா
பாரதிராஜா
Published on

பாரதிராஜா, அருணா முக்கிய கதாபாத்திரத்திரங்களில் நடித்த 'கல்லுக்குள் ஈரம்' என்ற தமிழ் படத்தின் மூலம் இயக்குநராக மாறினார் நிவாஸ். அதன்பின் நான்கு படங்களையும் இயக்கினார். சில காலமாக சினிமாவில் எந்த வேலையும் செய்யாமல் இருந்த ஒளிப்பதிவாளர் நிவாஸ் இன்று கேரளாவில் மரணமடைந்துள்ளார்.

தனது முதல் ஐந்து வெற்றிகரமான படங்களுக்கு துணை நின்ற நிவாஸின் மரணம் தனக்கு மிகுந்த வருத்தமளிப்பதாக இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். நிவாஸ் தனக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக இருந்தார் என சந்தோஷ் சிவன் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com