ஷாருக்கான் - அட்லீ இணையும் படத்தின் முக்கிய அப்டேட்

நடிகர் விஜய்யை வைத்து ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் அட்லீ, அடுத்ததாக ஷாருக்கான் படத்தை இயக்க உள்ளார்.
அட்லீ, ஷாருக்கான்
அட்லீ, ஷாருக்கான்
Published on

2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் அங்கம் வகித்து வருகிறார் அட்லீ. 

இயக்குனர் அட்லீ அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றை இயக்க உள்ளதாகவும், அதில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இருப்பினும் அதன்பின் அந்தப்படம் குறித்து எந்தவித அப்டேட்டும் வெளியாகவில்லை.

சமீபத்தில் ஷாருக்கான் படத்திற்கான கதை விவாதத்தில் இயக்குனர் அட்லீ ஈடுபட்டிருக்கும் ஒரு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது. இதன்மூலம் ஷாருக்கான் - அட்லீ இணையும் படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது உறுதியானது.

இந்நிலையில், இப்படம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஷாருக்கான் - அட்லீ இணையும் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. தற்போது பதான் என்ற படத்தில் நடித்து வரும் ஷாருக்கான் அதையடுத்து அட்லீ இயக்கும் படத்தில் நடிப்பார் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com