ஆர்யாவின் ‘டெடி’ பட ரிலீஸில் திடீர் மாற்றம்

சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘டெடி’ படத்தின் ஓடிடி ரிலீஸில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
டெடி பட போஸ்டர்
டெடி பட போஸ்டர்
Published on

ஆர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘டெடி’. இப்படத்தை டிக் டிக் டிக், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் போன்ற படங்களை இயக்கிய சக்தி சவுந்தரராஜன் இயக்கியுள்ளார். இதில் ஆர்யாவிற்கு ஜோடியாக அவரது மனைவி சாயிஷா நடித்துள்ளார். 

மேலும் இப்படத்தில், சதீஷ், கருணாகரன், சாக்‌ஷி அகர்வால், பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். காமெடி கலந்த திகில் படமாக இது உருவாகி உள்ளது.

முதலில் இப்படத்தை வருகிற மார்ச் 19-ந் தேதி ஓடிடி-யில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போது அதற்கு ஒரு வாரம் முன்னதாகவே, அதாவது வருகிற மார்ச் 12-ந் தேதியே ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com