நீ எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்... மனைவி சாயிஷாவிற்கு வாழ்த்து கூறிய ஆர்யா

வனமகன், கடைக்குட்டி சிங்கம், கஜினிகாந்த், காப்பான் படங்களில் நடித்த நடிகை சாயிஷா, தனது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார்.
ஆர்யா - சாயிஷா
ஆர்யா - சாயிஷா
Published on

காப்பான், கஜினிகாந்த் படங்களில் நடித்தபோது ஆர்யா - சாயிஷா இருவரும் காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. 

இன்று நடிகை சாயிஷா தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரையுலக நண்பர்கள், ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆர்யாவும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் சாயிஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், ‛‛வாழ்த்துக்கள் என் மனைவியே, நீ என் மீது வைத்திருக்கும் சிறந்த அன்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகட்டும். நீ மிகவும் அன்பான பெண் மற்றும் என் வாழ்க்கையில் நீ கிடைத்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன்'' என்று நெகழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com