இந்தியில் ரீமேக் ஆகும் அருண் விஜய்யின் ‘தடம்’... ஹீரோவாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

தமிழில் அருண் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ‘தடம்’ திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது.
அருண் விஜய்
அருண் விஜய்
Published on

அருண் விஜய் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படம் ‘தடம்’. மகிழ் திருமேனி இயக்கியிருந்த இப்படத்தில் தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட், வித்யா பிரதீப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். விறுவிறுப்பான திரில்லர் படமாக இது அமைந்திருந்ததால், இப்படத்திற்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

இதையடுத்து, இப்படம் தெலுங்கில் ‘ரெட்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் ராம் பொத்தினேனி, நிவேதா பெத்துராஜ் நடித்திருந்தனர். அங்கும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஆதித்யா ராய் கபூர், தடம் படத்தின் போஸ்டர்

இந்நிலையில், தடம் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். இதில் அருண் விஜய் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஆதித்யா ராய் கபூர் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இப்படத்தை அறிமுக இயக்குனர் வர்தன் கேட்கர் இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com