யானை பலத்துடன் களமிறங்கும் அருண் விஜய்

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படத்திற்கு தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அருண் விஜய்
அருண் விஜய்
Published on

சாமி, சிங்கம், வேல், ஆறு, பூஜை என பல்வேறு கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ஹரி, அடுத்ததாக அருண் விஜய்யின் 33-வது படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். 

நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்க, சமுத்திரக்கனி, ராதிகா, தலைவாசல் விஜய், குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

யானை படத்தின் போஸ்டர்

இதுவரை AV33 என்று அழைத்து வந்த இப்படத்தில் ‘யானை’ என்று தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளர். இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com