ரஜினிக்காக எஸ்.பி.பி. பாடிய கடைசி பாடல் வெளியானது... ரசிகர்கள் கொண்டாட்டம்

மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ரஜினிக்காக பாடிய கடைசி பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
அண்ணாத்த படத்தில் ரஜினி
அண்ணாத்த படத்தில் ரஜினி
Published on

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடி உள்ளார். இந்த பாடல் தற்போது ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com