அமலா பால்
அமலா பால்

புதிய அவதாரம் எடுத்த அமலா பால்

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் அமலா பால், முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Published on

தமிழில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான மைனா படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அமலாபால். இதையடுத்து விஜய், தனுஷ், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான இவர், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். 

அமலாபாலும், பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் கடந்த 2014-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து செய்து பிரிந்தனர். இதனைத் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார் அமலாபால். இவர் கைவசம் ‘அதோ அந்த பறவை போல’, ‘ஆடுஜீவிதம்’ போன்ற படங்கள் உள்ளன.

கடாவர் படத்தின் போஸ்டர்

இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் அமலா பால், தற்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். அதன்படி அவர் ‘கடாவர்’ என்கிற படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இப்படத்தில் அவரே முதன்மை கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். அனூப் பனிக்கர் இப்படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com