முதலில் டி.வி... அடுத்து ஓடிடி... ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தின் ரிலீஸ் பிளான்

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் ஒன்று நேரடியாக டி.வி.யில் வெளியாக இருக்கிறது.
ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா ராஜேஷ்
Published on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது திட்டம் இரண்டு என்ற திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இப்படத்தை அடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் பூமிகா திரைப்படம் நேரடியாக டி.வி.யில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், மனநோய் மருத்துவராக நடித்து இருக்கிறார். ‘இது வேதாளம் சொல்லும் கதை’ படத்தை இயக்கிய ரதீந்திரன் ஆர்.பிரசாத் இப்படத்தை இயக்கி உள்ளார். ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் சார்பில் கார்த்திக் சுப்புராஜ், சுதன் ஆகிய இருவரும் தயாரித்திருக்கிறார்கள்.

இப்படம் டி.வி.யில் ஆகஸ்ட் 22 ஆம் தேதியும், ஓடிடி தளத்தில் 23 ஆம் தேதியும் வெளியாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com