நேரடியாக டி.வி.யில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் படம்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் நேரடியாக டி.வி.யில் ரிலீசாக உள்ளதாம்.
ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா ராஜேஷ்
Published on

கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், புதுப் படங்கள் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதேபோல் சில படங்களை நேரடியாக டி.வி.யிலும் ரிலீஸ் செய்கின்றனர். ஏற்கனவே யோகிபாபுவின் ‘நாங்க ரொம்ப பிஸி’, ‘மண்டேலா’, விக்ரம் பிரபுவின் ‘புலிக்குத்தி பாண்டி’, சமுத்திரகனியின் ‘ஏலே’, ‘வெள்ளை யானை’, ஜிவி பிரகாஷின் ‘வணக்கம்டா மாப்ள’ ஆகிய படங்கள் நேரடியாக டி.வி.யில் வெளியிடப்பட்டன.

பூமிகா படத்தின் போஸ்டர்

அந்த வகையில், தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பூமிகா’ திரைப்படம் நேரடியாக டி.வி.யில் வெளியிடப்பட உள்ளதாம். இப்படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள இப்படத்தை ரதீந்திரன் ஆர்.பிரசாத் இயக்கி உள்ளார். திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்துக்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com