நடிகர் சௌந்தரராஜா வீட்டில் விசேஷம்... குவியும் வாழ்த்துக்கள்

நடிகர் சௌந்தரராஜா தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘இடி முழக்கம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
சௌந்தரராஜா
சௌந்தரராஜா
Published on

தமிழ் சினிமாவில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருபவர் சௌந்தரராஜா. இவர் சுந்தர பாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், ஜிகர்தண்டா, தெறி, பிகில், ஜகமே தந்திரம் போன்ற படங்களில் கவனிக்க வைக்கும் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘இடி முழக்கம்’ என்ற படத்தில் சௌந்தரராஜா நடித்து வருகிறார். நடிகர் சௌந்தரராஜா, தமன்னா என்பவரை 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது தமன்னா கர்ப்பமாக இருக்கிறார். 

மனைவி தமன்னாவுடன் சௌந்தரராஜா

இந்நிலையில் சௌந்தரராஜா வீட்டில் தமன்னாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி எளிமையாக நடந்துள்ளது. இதில் உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்துக் கொண்டு சௌந்தரராஜா - தமன்னா தம்பதியை வாழ்த்தி இருக்கிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com