தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் பேத்தி

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பரின் பேத்தி நடிகை தன்யா ராம்குமார் தமிழ் திரையுலகில் அறிமுகமாக இருக்கிறார்.
தன்யா ராம்குமார்
தன்யா ராம்குமார்
Published on

கன்னட திரையுலகின் மிகவும் பிரபலமாக இருந்தவர் ராஜ்குமார். இவர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர். ராஜ்குமாரின் மகன்கள் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார் ஆகியோர் ஏற்கனவே கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது ராஜ்குமாரின் பேத்தி தமிழ் திரையுலகில் அறிமுகமாக இருக்கிறார்.

ராஜ்குமாருடன் தன்யா

ராஜ்குமாரின் மகள் வழி பேத்தியான தன்யா ராம்குமார் ஏற்கனவே கன்னட திரையுலகில் ஒரு சில திரைப்படங்கள் நடித்துள்ளார். தற்போது தன்யா ராம்குமார் தமிழில் அறிமுகமாக இருப்பதாகவும் அவர் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com