‘மகாமுனி’ படத்துக்கு மேலும் 3 சர்வதேச விருது

சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா நடித்த ‘மகாமுனி’ திரைப்படம் ஏற்கனவே 11 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆர்யா
ஆர்யா
Published on

அருள்நிதி நடித்த மௌனகுரு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சாந்தகுமார். 2011-ம் ஆண்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார் நடித்த ‘மகாமுனி’ படத்தை இயக்கினார் சாந்தகுமார். கடந்த 2019-ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு, சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்று வருகிறது.

இப்படம் ஏற்கனவே 11 சர்வதேச விருதுகளை வென்றுள்ள நிலையில், தற்போது இஸ்ரேல் மற்றும் பூட்டான் நாட்டில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு மேலும் 3 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. 

சாந்தகுமாரின் டுவிட்டர் பதிவு

அதன்படி இஸ்ரேலில் நடைபெற்ற ‘நியர் நசரத்’ திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான விருதையும், பூட்டானில் நடைபெற்ற ‘ட்ரங்க்’ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குனர் ஆகிய பிரிவுகளில் மகாமுனி படத்துக்கு விருது கிடைத்துள்ளதாக அப்படத்தின் இயக்குனர் சாந்தகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com