விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் 3 சீரியல் நடிகைகள்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.
விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி
Published on

நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் ஆகியோர் வில்லனாக நடிக்கின்றனர். மேலும் அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளனர்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஷிவானி, மைனா நந்தினி, மகேஷ்வரி

இந்நிலையில், இப்படத்தில் நடிக்கும் நடிகைகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஷிவானி, மைனா நந்தினி, மகேஷ்வரி ஆகியோர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் மூவரும் சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com