மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணையும் தமன்னா

தர்மதுரை படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு பிரமாண்ட படத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன், தமன்னா இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #SyeraaNarasimhaReddy #Tamannaah
மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணையும் தமன்னா
Published on

உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை ‘சயீரா நரசிம்மரெட்டி’ என்ற பெயரில் பிரம்மாண்ட படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியாக சிரஞ்சீவி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அமிதாப்பச்சன், விஜய்சேதுபதி, சுதீப், ஜெகபதி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

இந்நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தமன்னா ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தர்மதுரை படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் தமன்னா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகும் இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா இற்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் படத்திற்காக ஆங்கிலேயர்கள் ஆளும் இந்தியா போன்ற பிரம்மாண்ட செட் ஒன்று ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அங்கு படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படம் அடுத்த ஆண்டு முதல் பாதியில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #SyeraaNarasimhaReddy #Tamannaah

X

Maalai Malar
www.maalaimalar.com