இதுவரை இல்லாத நல்ல வேடங்களில் நடிக்கிறேன்: தமன்னா

தற்போது நடித்து கொண்டிருக்கும் படங்களில் இதுவரை இல்லாத அழுத்தமான வேடங்களில் நடிப்பதாக நடிகை தமன்னா கூறியுள்ளார்.
இதுவரை இல்லாத நல்ல வேடங்களில் நடிக்கிறேன்: தமன்னா
Published on

விக்ரமுடன் தமன்னா நடித்த ‘ஸ்கெட்ச்’ படம் திரைக்கு வந்துள்ளது. தற்போது, பல புதிய படங்களில் நடித்து வருகிறார். இது குறித்து தமன்னா கூறியதாவது:-

“ ‘ஸ்கெட்ச்’ படத்துக்கு பிறகு தமிழில் சீனு ராமசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறேன். தெலுங்கில் ‘குயின்’ ரீமேக்கிலும் இன்னும் இரண்டு படங்களிலும் நடிக்கிறேன். இப்போது என்கைவசம் 5 படங்கள் இருக்கின்றன.

இந்த படங்களில் இதுவரை இல்லாத அழுத்தமான நல்ல வேடங்களில் நடிக்கிறேன். இதுவரை நடிகர்களை மட்டுமே மனதில் கொண்டு கதை எழுதி வந்தார்கள். அந்த நிலை மாறி, நடிகைகளை மனதில் வைத்து கதை எழுதும் காலம் இப்போது உருவாகி இருக்கிறது.

இதன் மூலம், கதை எழுதும் போதே நாயகிகளின் பாத்திரங்களுக்கும் தேவையான அழுத்தமான காட்சிகளை உருவாக்குகிறார்கள். இப்போது நான் நடிக்கும் அனைத்து படங்களிலும் நானே எதிர்பார்க்காத அழுத்தமான வேடங்களை கொடுத்திருக்கிறார்கள். எனவே, இந்த ஆண்டு நான் நடிக்கும் படங்கள் என்னை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் படங்களாக அமையும்’’ என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com